
கடலூர்: “அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று (மே 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதிய பண பயன்கள் கிடைக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிறைவுகளுக்கு சென்றவர்களை பல்கலைக்கழகத்துக்கு அழைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.