தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளார்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”அடுத்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பார். இது காலத்தின் கட்டாயம். நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க தாங்கள் அசைக்க முடியாத சக்தி என்ற எண்ணத்திலிருந்து 40-க்கு 40 வெற்றி பெற்றனர். கடந்த நான்கு மாதங்களாக நடைபெறும் சம்பவங்கள் தி.மு.கவின் உண்மை சுய ரூபத்தை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் காட்டி வரும் நிகழ்வுகளாக ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகிறது. தற்போது தி.மு.கவிற்கு கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது.

கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க டெல்லியில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியுள்ளார். நிச்சயமாக தி.மு.க தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிவிடும். சட்டசபை நடக்கும் போதே இரண்டு அமைச்சர்கள் விலகும் நிலை உள்ளது. சட்டமன்றம் முடிய ஒரே ஒருநாள் இருக்கும்போதுகூட அந்த அமைச்சர்களை காப்பாற்ற முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார் இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை.

33-ல் தற்போது இரண்டு விக்கெட்தான் விழுந்து உள்ளது. இன்னும் விக்கெட் மளமளவென சரியும். அதோடு இந்த ஆட்சி வீட்டுக்கு போகக்கூடிய சூழ்நிலை நிச்சயமாக வரும். பல அமைச்சர்கள் தேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலை எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.கவுடன் சேர மாட்டீர்கள் என்று சொன்ன நீங்கள் ஏன் சேர்ந்தீர்கள் என பள்ளிக்கூட குழந்தை போல முதல்வர் கேட்கிறார்.

கடம்பூர் ராஜூ

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆளும் அ.தி.மு.கவை தவிர எல்லோரும் ஆதரித்து விட்டனர் என்று முதல்வர் பேசுகிறார்.  ஒரு முதல்வர் எதிர்க்கட்சியை பார்த்து ஆளுங்கட்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா? தி.மு.கவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது புத்தி பேதலித்து போய்  பயத்தின் உச்சத்தில் பேசுகின்றனர்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *