
சென்னை: நீட் விலக்கு பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 19-ம் தேதி வரை 365 நாட்களும் தினமும் 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.