
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துவற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக டிஸ்பென்சரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், அதில் தொடர்புடையோர் என நீதிமன்றம் சார்ந்த அனைவருக்கும் ஏதேனும் அடிப்படை சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.