
புதுடெல்லி: முகலாயர் ஆட்சி காலத்தில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டைக்கு தான்தான் வரிசு என உரிமை கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகே உள்ள ஹவுராவில் வசித்து வருபவர் சுல்தானா பேகம். பகதூர் ஷா ஜாபர் II -ம் பரம்பரையின் வாரிசு எனக்கூறிக் கொள்ளும் இவர் டெல்லியில் உள்ள நினைவுச் சின்னமான செங்கோட்டைக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.