
புதுடெல்லி: டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் அருகில் உள்ள மளிகை கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொதுவான மருந்துகளை வாங்கிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இருமல் சிரப், வலி நிவாரணி மாத்திரைகள், பூஞ்சை எதிர்ப்பு கிரீம் போன்ற மருந்து சீட்டு தேவைப்படாத மருந்துகளை பெற மக்கள் இனி மருந்து கடைகளை தேடி அலைய வேண்டியதில்லை.