
சென்னை: “தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக – பாஜக கூட்டணியால்தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் எல்லாமே விளம்பரமாக இருந்து கொண்டிருக்கிறது.