
புதுடெல்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக அந்நிய ராணுவ சக்திகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் பாதுகாப்பு ஒத்திகை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.