
மதுராந்தகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மதுராந்தகத்திற்குள் தமிழ்நாடே கூடியிருக்கிறதா? என்று வியப்படைகின்ற வகையில், இந்த மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!