
பிரபல இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர், தமிழில் சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம் 2’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ‘ஹவுஸ் அரஸ்ட்’ என்ற நிகழ்ச்சியை ஆப் ஒன்றுக்காக நடத்தி வருகிறார். இதில் ஆபாசமான காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்பைச் சேர்ந்த கவுதம் ரவ்ரியா என்பவர் அளித்த புகாரையடுத்து அஜாஸ் கான் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜாஸ் கான் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும் ‘ஹவுஸ் அரஸ்ட்’ நிகழ்ச்சியில் வாய்ப்பு தருவதாகவும் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பை சார்கோப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.