
பெண்களுக்கு என்றே ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் தங்களின் சுற்றுலா அனுபவத்தை பெறுவார்கள். எங்கிருக்கிறது இந்த தீவு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பின்லாந்தில் அமைந்திருக்கும் சூப்பர்ஷி தீவு, அமைதி, ஓய்வு புத்துணர்ச்சியை விரும்பும் பெண்களுக்கான ஒரு சூப்பர் இடமாக உள்ளது.
இந்தத் தீவு தொழிலதிபர் கிறிஸ்டினா ஐடியாவில் உருவாகியுள்ளது. பெண்கள் சுதந்திரப் பறவையாக இருக்க ஒரு பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்க அவர் விரும்பினார். இதனையடுத்து, சூப்பர்ஷி தீவு உருவாக்கப்பட்டது.
தெற்கு பின்லாந்தில் உள்ள ராசெபோரி கடற்கரையில் அமைந்துள்ள இந்தத் தீவு, 8.4 ஏக்கர் பரப்பளவில் அழகிய இயற்கை அழகைக் கொண்டுள்ளது.
இந்த தீவு, இயற்கை, ஆடம்பரம், சாகசம் என எல்லாவற்றின் கலவையாக உள்ளது.
Supershe island பெண்கள் மட்டுமே அணுகக்கூடிய இடம். ஆண்களுக்கு அனுமதி கிடையாது. ஆடம்பரமான வில்லாக்கள் முதல் பாரம்பரியமான குடிசைகள் வரை தீவில் பல விதங்களில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களை பெண்கள் நவீன வசதிகளுடன், சுதந்திரமாக அனுபவிக்கலாம்.
கடற்கரையின் அழகை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் உடல் மற்றும் ஆன்மாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இங்கு யோகா, மசாஜ், பேசியல் என பெண்களின் விரும்பக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
சுற்றுலா சென்றாலே சரியான உணவு கிடைப்பது கடினம். ஆனால், அந்தக் குறையையும் இந்த தீவு தீர்த்து வைக்கிறது. பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட உள்ள இந்த சொர்க்கத்தை பலரும் தேர்வு செய்து சென்று வருகின்றனர்.