
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மகனை ஊக்கப்படுத்த, அவரின் பெற்றோர் கேக் வெட்டிக் கொண்டாடிய செயல் வைரலாகியிருக்கிறது.
கர்நாடகாவிலுள்ள பாகல்கோட்டில் உள்ள பசவேஷ்வர் ஆங்கில வழிக் கல்வி பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் சோழச்சகுடா. இவர், தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 32 சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, அதாவது 625 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து 6 பாடங்களிலும் ஒன்றில்கூட தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தார்.
இதனால், அவரின் நண்பர்களும் கூட கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் அபிஷேக்கின் பெற்றோர், தனது மகன் இந்தத் தோல்வியால் உடைந்துவிடக்கூடாது, மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் வகையில், மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர்.

இது குறித்து அபிஷேக்கின் பெற்றோர், “நீ தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் அல்ல. எப்போதும் மீண்டும் முயற்சி செய். அடுத்த முறை வெற்றி பெறலாம்.” என்று மகனுக்கு உத்வேகம் அளித்தனர்.
அப்பா, அம்மாவின் ஆதரவால் நெகிழ்ந்த அபிஷேக், “நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். மீண்டும் நான் தேர்வெழுதுவேன். தேர்ச்சி பெறுவேன், வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
Karnataka News :- Parents celebrate their son after he fails Class 10 exam by cutting a cake to boost his morale in Bagalkote. pic.twitter.com/EGmrEguOjX
— News Arena India (@NewsArenaIndia) May 5, 2025