
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜும், நிழல்கள் ரவியும் நேரில் சென்று கவுண்டமணியின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
சத்யராஜ்
அஞ்சலி செலுத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்யராஜ், “கவுண்டமணி அண்ணனுக்கும், எனக்கும் இருக்கின்ற நட்பு பற்றி உங்களுக்கே தெரியும். மிகவும் நெருக்கமான நட்பு.
நிறையப் படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடைய மனைவி, அக்கா சாந்தி இறப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
நிழல்கள் ரவி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிழல்கள் ரவி, “ கவுண்டமணி அண்ணனின் மனைவி இறந்தத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறோம். மிகவும் சோகமான ஒரு விஷயம். கவுண்டமணி அண்ணனை அவர்தான் முழுவதுமாகப் பார்த்துக்கொண்டார்.

எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து அண்ணனுக்கு உறுதுணையாக இருந்தார். கவுண்டமணி அண்ணனின் மனைவி சாந்திக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்கள்” என்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…