
சென்னை: குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் தெரிவித்தார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ எனும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த மாநாடு ‘ரெட்டிகான் 2025’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் முன்னிலையில் மாநாடு நடைபெற்றது.