
சென்னை: “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன். நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டில் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும்.