
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் தெரிவித்துள்ளதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் தலைமையிடமிருந்து தீர்க்கமான பதிலடியை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இஸ்லாமாபாத்தில் முக்கிய தலைவர்களிடையே பயத்தை வரவழைத்துள்ளது.