
தஞ்சாவூர்: மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் வரும் 11-ம் தேதி பாகவத மேளா தொடங்குகிறது. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா மெலட்டூர் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதியில் மே 11 -ம் தேதி இரவு தொடங்குகிறது.
தொடக்க விழாவில் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சக இயக்குநர் அணீஷ் பி.ராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இரவு 9.30 மணிக்கு பிரகலாத சரித்திரம்- பாகவத மேளா நாடகம் நடைபெறும்.