
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வாகன அணியின் ஒரு பகுதியாக இராணுவ லாரியும் சென்றது. காலை 11.30 மணியளவில் பேட்டரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டு, லாரி 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த விபத்தில் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீரர்களின் உடல்கள், அவர்களின் உடைமைகள், சில ஆவணங்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.