
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதுவரை 8 சீசன்களில் 500 ரன்களுக்கும் மேல் கோலி அடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நடிக்கையில் கவர்ச்சிப் புகைப்படத்துக்கு விராட் கோலி லைக் செய்த விவகாரம் வைரலானது.
அதற்குரிய விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார். இதற்கிடையில் நடிகை ஐஸ்வர்யா ராய் விராட் கோலி குறித்து பேசும் வீடியோ வைரலாகியிருக்கிறது.
அதில், “எனக்கு விராட் கோலி… அவரின் உறுதியும், விராட் கோலியின் ஆக்ரோஷமும் பிடிக்கும். அவருக்கு கிரிக்கெட் மீது அடுத்த கட்ட ஆர்வம் இருக்கிறது. விராட் கோலியின் ஆர்வமும் களத்தில் அவரது தெளிவும் வெளிப்படையானது” எனப் பாராட்டுகிறார்.