தமிழ்நாட்டில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் யாருக்கு என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தே.மு.தி.க. அ.தி.மு.க-வுடன் அங்கம் வகித்த தே.மு.தி.க-வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அ.தி.மு.க வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

பாமக, தேமுதிக , அதிமுக

அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த போது, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்ய சபா சீட் குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது” என்றார்.

ஆனால், அ.தி.மு.க. சார்பில் “இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டது.

பிரேமலதா  விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி

கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை” என அ.தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் தே.மு.தி.க-வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், “தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க உறு​தி​யாக வாக்குறுதி கொடுத்​தது. இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன்.

எல்.கே.சுதீஷ்
எல்.கே.சுதீஷ்

அ.தி.​மு.க அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்​ளக்​குறிச்​சி​யிலும் 2014-ல் சேலத்​தி​லும் போட்​டி​யிட்​டேன். சேலத்​தில் எனக்​காக மோடி பிரச்​சா​ரம் செய்​தார். 2019-ல் மீண்​டும் பா.ஜ.க கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்சியில் போட்​டி​யிட்​டேன். 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்​தும் யோசிக்கிறேன்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *