
சென்னை: நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இரு மாதங்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.