நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்திருக்கிறார்.

நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இது குறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், “மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அனைத்தையும் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்தை இயக்க வேண்டியிருக்கிறது.

ஆம்புலன்ஸ்

5 – ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பார்வை பறிபோகக் கூடாது என்பது மட்டுமே குறியாக இருந்தது. வழியில் அந்தந்த ஊரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுக்க போக்குவரத்து காவலர்கள் ஒத்துழைப்புடன் 3 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை அடைய‌ முடிந்தது” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *