பெங்களூரு: கர்​நாடக வீட்டு வசதித் துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான், ஹொசப்​பேட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாம் அனை​வரும் இந்​தி​யர்​கள். பாகிஸ்​தானுடன் நமக்கு எந்த உறவும் கிடை​யாது. பாகிஸ்​தான் நம்மை எதிரி​யாக நினைக்​கிறது. பாகிஸ்​தானுடன் போர் ஏற்​பட்​டால், நான் சண்​டை​யிட தயார். பிரதமர் மோடி​யும், உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் அனு​மதி அளித்​தால் நான் பாகிஸ்​தானுக்கு தற்​கொலை படை​யாக செல்ல தயா​ராக இருக்​கிறேன்.

மத்​திய அரசு எனக்கு ஒரு தற்​கொலை வெடிகுண்டை அளித்​தால் எனது உடலில் கட்​டிக் கொண்டு பாகிஸ்​தானுக்கு சென்று எதிரி​களை தாக்​கு​வேன். இதனை நான் வெறும் வார்த்​தைகளுக்​காக கூற​வில்​லை. அல்லா மீது ஆணை​யாக கூறுகிறேன். நமது எதிரி​களை அழிப்​ப​தற்​காக நான் எனது உயிரை​யும் கொடுக்க தயா​ராக இருக்​கிறேன். இவ்​வாறு ஜமீர் அகமது கான்​ தெரிவித்​தார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *