
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில், ஆனந்த் மற்றும் முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் அதிவேக படகில் வந்து, கத்திமுனையில் தாக்குதல் நடத்தி, வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.