
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சி.வி.சண்முகம் முன்வைத்துள்ள வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விரைவில் புதிய மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக மற்றும் ஓபிஎஸ், ஓ.பி.ரவீந்திரநாத், சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், வா.புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டவிதி, பாரா 15-ன் கீழ் வருகிறதா என விசாரணை நடத்தினர்.