
சம்மன் அனுப்பாமல் யாரையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்த கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிரான சிவில் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தன்னை விசாரணை என்ற பெயரில் அழைத்து எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரி எம்.ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.