‘RCB vs CSK’

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான சென்னை அணியின் லெவனில் இளம் வீரர் வன்ஷ் பேடியின் பெயர் சேர்க்கப்பட்டு, இறுதி நிமிடத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதில் தீபக் ஹூடா லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன?

Vansh Bedi

‘வன்ஷ் பேடி பின்னணி!’

வன்ஷ் பேடி ஒரு இளம் வீரர். 22 வயதுதான் ஆகிறது. அதிரடியாக ஆடியிருக்கிறார். டெல்லி ப்ரீமியர் லீகில் 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என இரண்டு விதமான பௌலர்களையும் நன்றாக ஆடக்கூடியவர். சென்னை அணி மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை அணியும் இன்றைய போட்டியின் லெவனில் வன்ஷ் பேடியை சேர்க்கும் முடிவில் இருந்திருக்கிறது. போட்டிக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக ப்ளேயிங் லெவனை அறிவிக்கும் டீம் ஷீட்டில் கூட வன்ஷ் பேடியின் பெயர் இருந்திருக்கிறது. ஆனால், இறுதிக்கட்டமாக போட்டிக்கு முன்பாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகையில் அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டிருக்கிறது.

Vansh Bedi
Vansh Bedi

அதனால் வேறு வழியில்லாமல் வன்ஷ் பேடியின் பெயரை அடித்துவிட்டு தீபக் ஹூடாவின் பெயரைச் சேர்த்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியிருக்கிறது. இப்போது அந்த டீம் ஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *