
மதுரை: “தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை,” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது என பிரச்சாரம் செய்து வந்தனர்.