
‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் எனக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவதாக நானி தெரிவித்துள்ளார்.
சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி தயாரித்து, நடித்த படம் ‘ஹிட் 3’. உலகமெங்கும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நாட்களில் 62 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதை முன்னிட்டு படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.