சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்கள் இருவரும் பழகிவந்தநிலையில் பாலாஜி, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் என்னுடைய பெயரில் சமூகவலைதளங்களில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆபாச போட்டோஸ்களை பதிவு செய்து வருகிறார் பாலாஜி. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பாலாஜி

புகார் கொடுத்த பெண் கொடுத்த தகவலின்படி சைபர்க்ரைம் போலீஸாரின் உதவியோடு அந்த சமூகவலைதளங்களின் கணக்குகளை ஆய்வு செய்தனர் ராஜமங்கலம் போலீஸார். அப்போது பாலாஜிதான் அந்தப் பெண்ணின் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகளை உருவாக்கியது தெரிந்தது.

இதையடுத்து பாலாஜியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணை தான் காதலித்தாகவும் ஆனால் அவர் தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால்தான் ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை பழிவாங்க இப்படி செய்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.

இதையடுத்து நீச்சல் பயிற்சியாளர் பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐபோன் உள்பட 3 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பாலாஜி, நீச்சல் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அந்தவகையில்தான் புகார் கொடுத்த பெண்ணிடம் பாலாஜி பழகியிருக்கிறார்.

தன்னுடைய காதலை பாலாஜி அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தியதும் அவர் அதை ஏற்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட பாலாஜி, அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூகவலைதள கணக்குகளைத் தொடங்கி அதில் ஆபாசமாக பதிவு செய்திருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதில் பதிவு செய்திருக்கிறார். அதைப்பார்த்த சிலர் அந்தப் பெண்ணுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகே எங்களிடம் அந்தப் பெண் புகாரளித்தார். தற்போது பாலாஜியை கைது செய்திருக்கிறோம். அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *