
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் இப்படத்துக்கு கிடைக்கும் வசூல் வைத்தே, இதன் வெற்றி உறுதிச் செய்யப்படும். இப்படத்தை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கார்த்திக் சுப்பராஜ், “‘ரெட்ரோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும், திரையரங்குகளில் ஒலித்த ஆரவாரம், கைதட்டல் மற்றும் உங்களுடைய அன்பை வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி. இது நல்ல நேரத்துக்கான தொடக்கம் என்று தெரியும். ஆனால், இதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.