
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மத்தியஸ்தம் மையத்தில் வழக்கு தொடர்பவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழகறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்குமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் கொடுத்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது.