தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டிஎன், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியையும் அதன் நுட்பத் தேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும், தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியை அறிவித்திருந்தது.

இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியில் மாணவர்களும் மொழி வல்லுநர்களும் தொழில்முனைவோர்களும் கலந்து கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருட்கள், செயற்கை நுண்ணறிவுச் செயலி, மொழிக் கருவிகள் போன்ற தமிழுக்கான நுட்பக் கருவிகளை உருவாக்கினார்கள்.

தமிழி நிரலாக்கப் போட்டி

தமிழ் நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக 142 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பல நாடுகளைச் சேர்ந்த நடுவர் குழுவின் மூலம் சுமார் 24 அணியினர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர்.

நேற்று மதுரை ஸ்டார்ட்அப்டிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தங்களது கண்டுபிடிப்புகளை நடுவர்கள் முன்னிலையில் விளக்கினர்.

தமிழி நிரலாக்கப் போட்டி
தமிழி நிரலாக்கப் போட்டி

அதில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசும் கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடமும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

மேலும் மாணவரல்லாத பிரிவில் சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர்வொர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி மற்றும் மியூசிக்களி நிறுவனமும் முதல் பரிசைப் பெற்றனர். மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் ஆரியல் லேப்ஸ் இரண்டாம் பரிசைப் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார்டப்-டிஎன் இணை துணைத் தலைவர் ஸ்டாலின் ஜேக்கப், டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் ஜே. கே. முத்து, தேசிய தகவலியல் மைய மேனாள் துணை இயக்குநர் முனைவர் இ.இனியநேரு, சேவ்மாம் செந்தில்குமார், விக்னேஷ் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினர்.

தமிழி நிரலாக்கப் போட்டி
தமிழி நிரலாக்கப் போட்டி

போட்டியாளர்களின் தயாரிப்புகளை வளர்த்தெடுக்கத் தேவையான ஊக்கத் தொகையும் அது சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும் என்று ஸ்டார்டப் டிஎன் மதுரை மைய அலுவலர் க. சக்திவேல் குறிப்பிட்டார்.

தொன்மை மட்டுமில்லாமல் தொடர்ச்சியும் தமிழுக்கு உண்டு என்பதை பறைசாற்றி இது போன்று தமிழுக்குத் தொழில்நுட்பப் போட்டிகளைத் தொடர்ந்து திரள் சார்பாக நடத்துவோம் என்று தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி ஊக்குவிப்போம் என்றும் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான செல்வமுரளி குறிப்பிட்டார்.

தமிழி நிரலாக்கப் போட்டி
தமிழி நிரலாக்கப் போட்டி

இந்த ஆண்டு போட்டியாளர் தங்கள் படைப்புகளை வளர்த்தெடுத்து அடுத்த ஆண்டுகளில் இதுபோன்ற மொழிதொழில் நிகழ்வுகளை முன்னோடிகளாக இருக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான நீச்சல்காரன் இராஜாராமன் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *