வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பாரத நாட்டிலேயே ஒவ்வொரு பருவ சூழலுக்கேற்ப சுற்றுலா செல்ல பல அறிய இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் பலருக்கு சுற்றுலா என்றாலே தில்லி, ஆக்ரா, சிம்லா, காஷ்மீர் என வட இந்திய தளங்களே பெரிதும் ஞாபகம் வரும். இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து சேவை மற்றும் பல சுற்றுலா இயற்றிகள்.

வட இந்திய சுற்றுலா தளங்களுக்கு சற்றும் குறை இல்லாமல் இன்றும் தூய்மை கெடாமல் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி தான் “வட கிழக்கு இந்தியா “

Monpa people of Arunachal Pradesh

சிக்கிம், அசாம், அருணாச்சல், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகலாண்ட் என் எட்டு சகோதரிகள் ஒன்றிணைந்த பகுதி தான் “வட கிழக்கு இந்தியா “

ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு சிறப்பு உண்டு

2023 ஆம் வருடம் “ஹோலி பண்டிகை“ விடுமுறையை (05-12 மார்ச்) “அருணாச்சல” பகுதிக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தேன்.

சுற்றுலா செல்வதற்கு முன்பு சில பயணத் தகவல்கள்

அருணாச்சல்

பாரத நிலப்பகுதியில் சூரியன் (அருணை) உதிக்கும் முதல் இடம் (அருணாச்சல்). ஆதியும் அந்தமுமற்ற ஒளி வடிவமாய் அருணாச்சலஸ்வர் நின்ற திருவண்ணாமலை தலத்தை நினைவுகூறலாம்.

காலை பணிபடர்ந்த இமயமலையில் ரவி உதிக்கும் அழகே அழகு. இமயமலையிலேயே அமைந்துள்ளதால் இயற்கை எழில் நிறைந்திருக்கும் பகுதி.

அருணாச்சல சுற்றுலா தளங்களை கிழக்கு , மேற்கு என இருபகுதியாக பிரிக்கலாம்.

கிழக்கு பகுதி மலையேற்றம், மீன் பிடித்தல், படகு ஓட்டுதல், சாகச விளையாட்டு ஏற்ற இடம்.

மேற்கு பகுதி பெளத்த மடங்கள், பனி, இந்திய – சீன போர் எச்சங்கள், இந்திய – சீன எல்லை மற்றும் புனித நீர்வீழ்ச்சி.

பயணத் தகவல்கள்

அருணாச்சல் தலைநகர் இட்டாநகர்க்கு கொல்கத்தா மற்றும் குவஹாத்தியிலிருந்து நேரடி விமான சேவை உள்ளது. கிழக்கு பகுதி சுற்றுலா தளங்களுக்கு இங்கிருந்து செல்லலாம்.

மேற்கு பகுதிக்கு செல்ல தரை வழி மார்க்கமே உள்ளது. விமானம்/ தொடர் வண்டி மூலம் குவஹாத்தி அடையலாம். குழுவாக செல்வோர் மகிழு ஊர்தி / சிற்றுந்து மூலம் பயணம் செய்யலாம். தனி நபர் அல்லது இருவர் என்றால் தனியார் வாகன சேவை (டாடா சுமோ ) உள்ளது. குவஹாத்தியிலிருந்து தவாங் செல்ல ரூ 1500-2000 கட்டணம் உள்ளது.

அருணாச்சல பகுதியில் நுழைவதற்கு “உள் வரி அனுமதி” ( Inline permit) வாங்க வேண்டும். ஆதார் அட்டை மற்றும் புகைபடம் அவசியம். நேரடியாக /இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ 300-500 வரை வசூலிக்கபடுகிறது.

பூமல கணவாய் மற்றும் “சுமி கியடிசே” – புனித நீர் வீழ்ச்சிக்கு செல்ல தவங் நகரத்தில் உள்ள ராணுவத்திடம் அனுமதி பெற்ற வாகனகளுக்கே அனுமதி. வண்டிக் கட்டணம் ரூ 5000-6000

தங்குவதற்கு சொகுசு விடுதிகள் / விடுதிகள்/இல்ல விடுதிகள் (Homestays) பல உள்ளன .

பெரும்பாலும் அசைவ உணவே. சௌமீன், மோ மோ என சீன திபேதிய உணவுகளும் வட இந்திய உணவுகளும் கிடைக்கும்.

Arunachal Pradesh

தவங் செல்லும் வழியில் இந்திய இராணுவம் ஆடை, காலணி, குளிராடை மற்றும் நினைவு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். அங்கு விற்கும் புத்த நினைவு பொருட்கள் சீனாவில் தயாரானது என்பது முரண்.

திபேதிய மொழி தான் வழக்கு மொழி. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் புரிந்துகொள்கிறார்கள்.

திசம்பர் ஜனவரி மாதங்களில் அதிக பணிப்பொழிவும் சாலையில் பணிகட்டியும் இருக்கும். போக்குவரத்து தடை ஏற்ப்படவாய்ப்பு உண்டு. பிப்ரவரி – மார்ச் மாதம் சுற்றுலா செல்ல ஏற்ற காலம்.

விரைவாக இராணுவ தளவாடங்க்கள், வீரர்கள், உணவுப் பொருட்கள், மக்கள் போக்குவரத்து என எல்லை சாலை நிறுவனம் (Border Road Organisation ) மிக நேர்த்தியான சாலைகள் அமைத்து பராமரிக்கின்றன. ஆதலால், பயணம் சிறப்பாக உள்ளது.

இப்போ அருணாச்சல் சுற்றுலாவிற்கு செல்வோமா.

நமெரி தேசிய பூங்கா (Nameri National Park)

குவஹாத்தி விமான நிலையத்தில் இருந்து மகிழுந்து மூலம் தேஜ்பூர் வழியாக சுமார் 5 மணி நேர பயணத்தில் நெமெரி கன்னியாகா ஏகோ ரிசார்ட்டில் (Nameri Kanyaka Eco Resort) மாலை வந்து சேர்ந்தோம். இது அசாம் பகுதிக்கு உட்பட்டது, பசுமையான மரங்களுக்கு இடையே மரத்திலான தங்கும் குடில்கள் அமைதியும் அழகும் நிறைந்தது. காலையில் பறவைகள் சத்தம் இனிமையான இசையாக இருந்தது.

நமெரி தேசிய பூங்கா

முதல் சுற்றுலா இடம் – காமெனக் நதியில் வேகப்படகு சவாரி (River Rafting). வேகப்படகு சவாரிக்கு ரிஷிகேஷ் புகழ்பெற்றது எனினும் இது ஒரு புதிய அனுபவம். சில இடங்களில் அமைதியாக சில இடங்களில் ஆக்ரோஷமாக நதி நீர், படகு மீது மோதுவது சிலிர்க்கு வைக்கும். கரை ஓரங்களில் பறவைகள், இலை உதிர்த்த மரங்கள் ,கூழாக்கற்கள், சூரியன் மிதமான சூட்டில் என அழகான இனிமையான தொடக்கம்

திராங்க் (Dirang)

சமவெளி பகுதியான நமேரியிலிருந்து இமயமலை தொடரை நோக்கி பயணம். சிறு நகரம் பலுகபோங் (Bhalukpong) தான் அருணாச்சல எல்லையின் தொடக்கம். இங்கு தான் “உள் வரி அனுமதி” ( Inline permit) நேரடியாக வாங்கலாம். இனி மலைப்பாதை, பல குண்டு ஊசி வளைவுகளை கொண்டது.

மலைத் தொடர்களும், சிறு அருவி, ஆறு, பள்ளத்தாக்கு என வழியெங்கும் இயக்கை எழில். பயணத்தில் தலைச்சுற்றல், குமட்டல் என உடல் உபாதை உள்ளவர்கள் தேவையான முன்னெசரிக்கை மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது .

சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின் திராங்க் வந்தடைதோம். திராங்க் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இங்கு “டுபசுங்க தரகியே லிங்க் “ (Thupsung Dhargye Ling) என்ற புத்த மடலாயம் சிறப்பான சுற்றுலா தளம்.

Buddhist Monastery

மலைச்சரிவில் மூன்று அடுக்க நிலையில் மலை ஆற்றை நோக்கி அமைந்துள்ள பொன் நிற கோயில் அழகு. திராங்க் ஆற்றங்கறையில் அமைந்த ஒரு இல்லக்குடிலில் இரவு தங்கினோம்.மறு நாள் திராங்க் புத்தாண்டு கொண்டாடட்த்திற்கு தயாரானது. வீட்டை வண்ண கொடிகள் மூலம் அலங்கரித்தனர்

செல கணவாய் (Sela Pass )

காலையிலேயே திராங்க்கிலிருந்து செல கணவாய் வழியாக தவங் (Tawang) செல்லும் பயணத்தை தொடங்கினோம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13700 அடி உயரத்தில் உள்ளது செல கணவாய். 1962-ல் நடைப்பெற்ற இந்தியா – சீனா போரில், சீன படைகள் இந்த கணவாய் மூலம் வந்து படையெடுத்தனர்.

வீரமரணம் அடைந்த பல வீரர்கள் நினைவாக தவங்கில் (Tawang) நினைவுச் சின்னம் அமைக்கப்பட்துள்ளது.

மார்ச் மாதத்திலும் செல கணவாயில் பனிக்கட்டி. சாலை இருமருங்கிலும் பனிக்கட்டி. பாதி உறைந்து பாதி உறையாமல் இருக்கும் சிறு நீர் நிலை. ஒரு பக்கம் குளிர் மறு பக்கம் விலையாட வா என அழைக்கும் பனிக்கட்டி. குளிரை பொருட்படுத்தாமல் பணிகட்டியில் நன்றாக விளையாடலாம்.

மாவீரன் ஜஸ்வந்த் சிங் ராவத் நினைவகம்

இது ஒரு முக்கிய சுற்றுலா தளம் மட்டுமல்ல ஒரு மாவீரனின் நினைவகம். தனி ஒருவனாய் ஜஸ்வந்த் சிங் ராவத் தொடர்ச்சியாக 72 மணி நேரம் போர் முனையில் நின்று சுமார் 300 சீன வீரர்களை கொன்று வீரமரணம் எய்தினார். அவர் நினைவாக இந்த இடம் ஜஸ்வந்த் கரக் (Jaswant Garh) என அழைக்கப்படுகிறது.

அவர் நினைவாக சுற்றுலா பயணிகளுக்கு இராணுவத்தினர் இலவச தேநீர் வழங்குகிறரர்கள். தினமும் ஜஸ்வந்த் சிங் இரவு இவ்விடத்தில் தங்கி உறங்குவதாக நம்பப்படுகிறது. “செல”, இவருடைய காதலி, இருவரும் இணைந்தே போரிட்டனர். அவள் நினைவாக தான் நாம் கண்டு களித்த கணவாய்க்கு பெயரிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்

தவங் (Tawang)

அருணாச்சல பகுதியின் முக்கிய நகரங்களில் ஒன்று தவங். இது திபெதின் பகுதி என்று சீன உரிமை கொண்டாடுகிறது. சீன ஆக்கிரமிப்பு முன் திபெத் தலை நகர் லகாசவிற்கும் (Lhasa) தவங்கிற்கும் போக்குவரத்து இருந்துள்ளது.

தவங் (Tawang)

சீன ஆக்கிரமிப்பின் போது தலாய் லாமா லகாசவிலிருந்து பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் நடைபயணமாக வந்து தவங்கில் அடைக்கலம் புகுந்தார். இங்கும் ஒரு இல்லக் குடிலில் தங்கினோம்.

இங்கு மிகப் பழைமையானதும் பெரிதும் ஆன புத்த மடாலயம் உள்ளது. தலாய் லாமா நிறுவிய மடாலயம். பக்தர்கள் பழங்கள் தவிர உணவு பொருட்கள் பலவற்றை காணிக்கையாக தருகிறார்கள். அவற்றை வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்க நகரின் பிற பகுதிகளில் பல வடிவங்களில் அளவுகளில் புத்த சிலைகள் நிரவப்பட்டு சுற்றுலா தளங்களாக மாற்றம் பெறுகின்றன.

மற்றுமொரு முக்கிய சுற்றுலா இடம், இந்தியா – சீன போர் வீரர்களின் நினைவகம். இங்கு சீன படையெடுப்பு பற்றிய வரை படங்கள், வீர மரணம் அடைந்த வீரகள் பற்றிய குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு இந்தியா-சீன போர் பற்றிய ஒரு குறும்படம் மாலை இரு முறை திரையிடுகிறார்கள்.

ஷுநகஷ்டர் ஏரி (Shungaster Lake)

மறுநாள் ஹோலி பண்டிகை. காலையிலேயே தவங்கிலிருந்து இராணுவம் அனுமதி பெற்ற வாகனத்தில் பூமல கணவாய் செல்ல பயணம் மேற்கோண்டோம். தங்கும் விடுதிகளிலேயே இத்தகைய வாகனங்களை முன்பதிவு செய்யலாம்.

பூமல கணவாய் முன் சென்ற இடம் ஷுநகஷ்டர் ஏரி. மலைகளுக்கு நடுவே மிகப்பெரிய நன்னீர் எரி. “கொய்ல” (Koyla) ஹிந்தி திரைப்படத்தில் மாதுரி தீக்க்ஷித் நடனமாடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டதால் “மாதுரி தீக்க்ஷித் ஏரி என அடையாளம் காணப்படுகிறது.

ஷுநகஷ்டர் ஏரி போகும் வழியில் தீசரி உடசி குருத்வாரா (Teesri Gurudwara ) உள்ளது.

பூமல கணவாய் (Bumla Pass )

ஷுநகஷ்டர் ஏரியிலிருந்து அருணாசலத்தின் உசசம் – இந்திய சீன எல்லைக்கு பயணம். வழியெங்கும் இராணுவத்தின் காவல் கூண்டுகள். சாலை இருபுறமும் பனிக்கட்டி.

இறங்கி விளையாட அனுமதியில்லை.கடல் மட்டத்திலிருந்து சுமார் 15200 அடி உயரத்தில் உள்ளது பூமல கணவாய். எங்குப் பார்த்தாலும் வெள்ளை நிற பனிக்கட்டி.

சில இடங்களில் முழங்கால் உள்ளே செல்லும் ஆழம் உள்ளது. தூய வெளிர் நீல வானம் தரையெங்கும் வெள்ளை நிற பனிக்கட்டி ஆங்காங்கே கருபு நிற பாறைத் திட்டுகள்.

1962 இந்திய – சீன போருக்கு பின், இரு நாடுகளுக்குமிடையே எல்லைக்கோடு இவ்விடத்தில் வரையறுக்கப்பட்டது. இந்திய எல்லையிலிருந்து சுமார் 10 கி. மீ தொலைவில் சீன எல்லை அமைந்துள்ளது.

இடைப்பட்ட பகுதி யாரும் உரிமை கோர இயலாது. சுற்றியள்ள மழைக்குன்றுகளில் இந்திய ராணுவம் இடையாராது காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ராணுவத்தினர் பூமல கணவாய் பற்றி தகவல்கள் தறுகின்றணர். சிறிய உணவகமும் உள்ளது. மதியம் 12 மணி வரை தான் பூமல கணவாய் அனுமதி.

இயற்கை காட்சிகள்

வழியெங்கும் பல அழகிய மலைதொடர்கள், ஓடைகள், ஆறுகள் , நீர் வீழ்ச்சி என இயற்கை கொஞ்சி விளையாடும் பகுதி. அடர்ந்த தோல் போர்த்திய காட்டு எருமை வழியில் இயல்பாக காணலாம்.

ஒரு வேண்டுகோள் – சுற்றுலா செல்லும் இடங்களில் கூடுமானவரை அசுத்தம் செய்யாமல் தூய்மையை கடைப்பிடித்தால் சிறப்பு.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *