
சென்னை: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.