
துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.
நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மும்முரமாக தொடங்க இருக்கிறது. இதனை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபாரர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் துல்கர் சல்மான். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் மிஷ்கின். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.