
லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரியானாவின் அம்பாலா, மேற்கு வங்கத்தின் ஹசிமாரா பகுதியில் உள்ள இந்திய விமானப் படை தளங்கள் சார்பில், ‘ஆபரேசன் ஆக்ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்று உள்ளன.
போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தின் கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் நேற்று தரையிறங்கின. பின்னர் அங்கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்றன. உ.பி.யின் மீரட், பிரயாக்ராஜை இணைக்கும் வகையில் 1,047 கி.மீ. தொலைவுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.