சென்னை: பொது எதிரி​யான மக்​கள் விரோத திமுக அரசை வீழ்த்த பாஜக​வுடன் கூட்​டணி அமைத்த பழனி​சாமிக்கு பாராட்​டு​கள் என்று அதி​முக செயற்​குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதி​முக செயற்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் அவைத்​தலை​வர் அ.தமிழ்​மகன் உசேன் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் மொத்​தம் 16 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதன் விவரம்: கடந்த தேர்​தலில் 525 தேர்​தல் வாக்​குறு​தி​களை அளித்​து, அவற்றை நிறைவேற்ற முடி​யாமல் தவறான தகவல்​களை தந்​து, அனைத்து தரப்பு மக்​களை​யும் ஏமாற்​றி, வஞ்​சிக்​கும் திமுக அரசுக்கு கண்​டனம். நீட் ரத்து விஷ​யத்​தில் கபடநாடகம் நடத்தி வரும் திமுக ஆட்​சி​யாளர்​களின் வாய்​ஜாலத்தை மாணவ, மாணவி​களும், மக்​களும் இனி​யும் நம்ப தயா​ராக இல்​லை. எனவே, மக்​களிட​மும் திமுக தலை​வர் ஸ்டா​லின் பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *