
சென்னை: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.