
‘ரோலக்ஸ்’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கிவைத்தார்.
அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய லோகேஷ் கனகராஜ், “‘ரெட்ரோ’ படம் இன்னும் பார்க்கவில்லை. படம் ரொம்ப நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். கார்த்திக் சுப்புராஜ் படம் கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும். ‘கூலி’ படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.