வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மும்பாய் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அது ஒரு நெருக்கடியான நகரம். மும்பாய் மக்களின் உயிர்நாடியான மும்பையின் மின்சார ரயில் . நகரெங்கும் நெரிசல் மிகுந்த கூட்டம். மும்பாயின் நடுவே பரந்து விரிந்து கிடக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி.

இந்திய நிதித்துறையின் தலைநகரம் (Financial Capital) சாலையோர துரித உணவுகள். பாலிவுட் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு சில அடையாளங்களோடு மும்பையை சுருக்கி விட முடியாது.

மும்பாயின் இன்னொரு அடையாளமாக நான் பார்த்தது மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த ஆரே காலனி (Aarey Milk Colony).

இந்தியாவின் சோட்டா காஷ்மீர் என்ற அடைமொழியை கொண்ட பகுதி.

Sanjay Gandhi National Park

மேற்கு மும்பையில் உள்ள போரிவலி கிழக்கு பகுதியிலிருந்து தொடங்கும் மலை காடுகள் கோரேகாவ் கிழக்கு பகுதியில் அது “ஆரே காலனி” என்ற பெயரைத் தாங்கி பொவாய், முலூண்ட் வழியே நீண்டு செழித்து கிடக்கிறது.

ஒரு மாபெரும் நகரத்தின் ஊடாக மலைக் காடுகள் அமைந்த பகுதி. மும்பாய் மக்களின் குடி தண்ணீர் தேவையின் ஒரு பகுதியை ஆரே வனப்பகுதியில் உற்பத்தியான பொவாய் ஏரி வழங்குகிறது. மும்பாய் நகரத்திற்கு ஆண்டு முழுவதும் தென்றல் காற்றை ஆரே காலனி வீசிக்கொண்டிருக்கிறது.

விடுதலைக்கு முன்னர் ஐரோப்பிய காலனித்துவ நடைமுறை, வணிகம் பல ஆண்டுகளாக அன்றைய பம்பாயில் இருந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

மும்பாயின் தொன்மையான கட்டிடங்கள் ஐரோப்பா கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது. மும்பாயின் சர்ச் கேட் மற்றும் பழைய விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையங்களைப் பார்த்தால் பழைய லண்டன் போன்ற தோற்றம் நமக்குள் வந்து செல்லும். 

உலகில் லண்டன் மாநகருக்கு அடுத்ததாக மும்பாயின் சாலைகளில் தான் சிவப்பு நிறத்தில் இரட்டை மாடி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்ததன. அதில் பயணம் செய்தால் ஒருகணம் நாமே லண்டன் தேம்ஸ் நதியில் தொங்கிக் கொண்டிருக்கும் மேம்பாலத்தில் செல்வது போல் காட்சி மனதில் தோன்றும்.

லண்டன் நகருக்கு ஒரு தேம்ஸ் நதி என்றால் மும்பாய்க்கு ஒரு மிட்டி நதி.  ஆரே வனப்பகுதியில் ஊற்றெடுத்து அந்தேரி நகருக்குள் மெதுவாக பாய்ந்து, பாந்திரா மாங்ரோ காடுகள் வழியே அரபிக்கடல் கடலில் கலக்கிறது. மிட்டி என்றால் மராத்தி மொழியில் இனிப்பு என்று பொருள். ஒரு காலத்தில் தித்திக்கும் தண்ணீர் ஓடும் நதியான இருந்திருக்கலாம். 

ஆரே காலனி காடுகள் வனத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும். அறிய வகையில் காணப்படும் சிறுத்தைகள் வாழும் பகுதி என்பதால் உள்ளே நுழைவதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது.  ஆரே காலனியில் நுழைய வெறும் மூன்றே வழித்தடங்கள் தான் உண்டு. மேற்கு மும்பையின் கோரேகாவ் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அதன் முதல் நுழைவாயில். 

பொவாயில் அமைந்திருக்கும் இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்ப வளாகமாக ‘ஐஐடி பம்பாய்’ பகுதியில் இருந்து சொற்ப தொலைவில் பயணம் செய்தால் இரண்டாவது நுழைவாயில் வழியாக ஆரே செல்லலாம்.

மூன்றாவது நுழைவாயில் அந்தேரி கிழக்கு பகுதியில் இருக்கும் SEZ (Special Economic Zone) அருகில் இருக்கும் வழியே அமைந்திருக்கிறது. 

ஆரே காலனிக்குச் சொல்ல நமது பயணம் உள்ளூர் (Local Train – Harbor Line)‌ மின்சார ரயிலில் தொடங்கியது.‌ நமது காலக்கட்டத்தில் பம்பாய் என்றாலே திரைப்படத்தில் வரும் காட்சிகளை மனதில் வைத்து கொள்வோம் அல்லவா? அதே போன்ற மனநிலை எனக்கும் ஏற்பட்டது. 

“என்னைக் காணவில்லையே நேற்றோடு 

எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு”

அந்த பாடலில் பம்பாயில் மின்சார ரயில்கள் பின்னணியில் வினித் பாடி நடந்து சென்ற வாஷி மேம்பாலம். நான் பயணித்த ஹார்பர் ரயில் அதே வழியில் கடந்து செல்ல சன்னலோர காட்சிகள் நம் மனதை 2000ம் காலகட்டத்திற்கே எடுத்துச் சென்றது. 

நியூ மும்பையில் இருந்து செல்லும் மின்சார ரயில்கள் கடற்கரை வழித்தடத்தில் CST வரை செல்லும். நாம் ஆரே காலனி செல்ல நடுவில் வேறொரு ரயிலை பிடிக்க வேண்டும். 

தாதர் ரயில் நிலையத்தில் மும்பையின் மேற்கு வழித்தடத்தில் இயங்கும் உள்ளூர் ரயிலை பிடிக்க கூட்டத்தோடு கூட்டமாக நடந்து சென்றேன். மூச்சுக் காற்று விடக் கூட இடைவெளி இல்லாத ஒரு கூட்டம். 

எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம் என்பதை கண்கூடாக மும்பையின் ரயில் நிலையங்களில் காணக் கிடைத்தது. 

மும்பாய் மேற்கு வழித்தடத்தில் இயங்கும் சர்ச் கேட் – போரிவலி ரயில் நடைமேடை ஒன்றில் வந்து கொண்டிருந்தது. அடித்து பிடித்து ரயிலின் உள்ளே ஏறிய மக்கள் இருக்க இடம் தேடவில்லை மாறாக நிற்பதற்கு இடம் தேடினார்கள்.

முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு கோரேகாவ் ரயில் நிலையம் வந்தது. எலும்பு முறிவு வரும் அளவுக்கு ஒரு நெரிசல் மின்சார ரயிலில் முழுவதும் காணப்பட்டது. நாமும் பிற பயணிகள் போலவே ஒட்டிக்கொண்டு கோரேகாவ் ரயில் நிலையத்தில் இறங்கினோம். 

இதமான ஒரு தென்றல் காற்று நம் முகத்தை வருடியது. தென்றல் வந்து என்னைத் தொடும் என்பதாய் என்னைத் தொட்டுக் சென்றது. நிச்சயமாக அது ஆரே காலனியில் உருவாக்கிய தென்றல் காற்றாக தான் இருக்க வேண்டும். 

தென்றல் காற்று என் நாசியின் எட்டிய அடுத்து நொடியில் சாலையோர உணவான “வடாப்பாவ்” மனம் பசியின் நாடியை தூண்டியது. மும்பாய் மக்களின் விருப்ப துரித உணவாக வாடாப்பாய் விளங்குகிறது. 

(அவித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, மிளகு , பூண்டு இவைகளை கொண்டு வடை வடிவில் எண்ணெயில் சுட்டு எடுக்கப்பட்டது உணவு, அதனை பேக்கரியில் சுட்ட ரொட்டி soft bun – உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது) 

கோரேகாவ் ரயில் நிலையத்தில் இருந்து ஆரே காலனியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு மாநகர பயணிகள் பேருந்து சேவைகள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இயங்கியது. இந்திய நகரங்களில் வேறெங்கும் இல்லாத ஒரு புதுமை மும்பாய் அரசு பேருந்துகளில் காணலாம்.

மின்சார ரயிலில் அடித்து பிடித்து ஏறுவது போல பேருந்துகளில் மக்கள் அப்படி ஏறுவதில்லை. மிக நீண்ட வரிசையில் எறும்புகள் போல ஒன்றன் பின் ஒன்றாக பொறுமையுடன் ஏறுகின்றனர். பேருந்து நடத்துனர் வழிகாட்டுதலின் படி மக்கள் இருக்கையில் அமருகின்றனர்.

மும்பாய் பேருந்துகளின் வடிவமைப்பு முழுவதும் லண்டன் பேருந்துகள் போலவே இருக்கின்றது. பேருந்தின் ஓட்டுநர் இருக்கையின் மேல் பொருத்தப்பட்ட வெண்கல மணி ஒலியே பேருந்து ஓட்டுநரை இயக்க வைக்கும். ஒரு மணி அடித்தால் எந்த இடம் என்று பார்க்காமல் அங்கேயே நிறுத்திவிடுவார் ஓட்டுநர். இரண்டு மணி அடித்தால் மட்டுமே பேருந்தை ஓட்டுநர் இயக்க முடியும். 

அதில் ஒரு பேருந்தை பிடித்து பேருந்தின் இறுதி நிறுத்தம் எதுவென்று கேட்டு அதுவரைக்கும் செல்ல பயணச்சீட்டை பெற்றுக் கொண்டேன். அந்த பேருந்து ஆரே காலனியின் மலை உச்சியில் அமைந்திருந்த நியூசிலாந்து மாணவர் விடுதி வரை சென்று திரும்பும் பேருந்து. 

பேருந்து நிலையத்தில் இருந்து மெதுவாக கிளம்பிய பேருந்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது. மும்பாயின் முதன்மை சாலை வழியான Western Express Highway -ஐ தாண்டியதும் வந்த  முதல் நுழைவாயில் ஆரே காலனியை அடைய முடியும்.

உள்ளே நுழையும் ஒவ்வொரு தனியார் வாகனத்தையும் அரசாங்க ஊழியர்கள் மேலோட்டமாக பார்வை இடுகின்றனர். ஏதாவது சட்டத்திற்கு புறம்பாக பொருட்களை ஏற்றிச் செல்கிறார்களாக என்பதை கண்ணும் கருத்துமாக பார்க்கிறார். பேருந்தை அவர்கள் சோதனை செய்யவில்லை.

பேருந்தில் பயணம் செய்த நேரத்தில் இருந்தே நமக்கு மும்பாய் போன்ற தோற்றம் வரவில்லை ஏனென்றால் பயணம் செய்த முக்கால் வாசி பேர் தமிழ் பேசினார்கள் என்பது நமக்கு வியப்பளித்தது. 

வரலாற்று ரீதியாக இதற்கு காரணம் இருக்கிறது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் பிரித்தானிய அரசு ஆரே காலனி பகுதியில் மிகப்பெரிய பால் பண்ணை அமைக்க திட்டம் தீட்டியது. அது பம்பாய் முழுவதும் பால் தேவையை முழுமையடையச் செய்வதாக இருந்தது. இங்கு உற்பத்தியாகும் பாலுக்கு Aarey Milk என்றே பெயர் சூட்டப்பட்டது. 

பால் பண்ணைக்கு தேவையான பாலை ஆரே காலனியில் வெவ்வேறு பகுதிகளில் மாடு வளர்ப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரே காலனி முழுவதும் மொத்தம் 32 பால் மாடுகள் வளர்ப்பு நிலையம் உள்ளது. ஒவ்வொரு மாடுகள் வளர்ப்பு நிலையமும் ஆயிரக்கணக்கில் மாடுகள் இருந்தன. வளர்ப்பு மாடுகள் கால்நடைகளாக இருக்கவில்லை. ஒரு இடத்தில் மணி கணக்கில் நின்று கொண்டிருக்கும். காலை மாலை இரு வேளையும் அதனை குளிப்பாட்டி விட ஆட்கள் அங்கே தங்கி வேலை செய்தார்கள்.

ஆரே காலனியின் இறந்த மாடுகளை அப்படியே வனப்பகுதியில் விடப்படும் போக்கு அந்த காலத்தில் இருந்து. இறந்த மாடுகளின் உடலை உண்ண கழுகுகள் ஆரே காடுகள் முழுவதும் காணப்பட்டது. இதே கழுகுகள் தான் பம்பாயில் உள்ள டோன்கர்வாடி பார்சி பஞ்சாயத்து பறந்து கொண்டிருந்தது. 2000ஆம் காலகட்டத்தில் மொத்த கழுகுகள் கூட்டமும் காணாமல் அழிந்து போய்விட்டது என்பது வேறு கதை‌. 

கறவை மாடுகள் நாள்தோறும் காலை மாலை இரு வேளையும் பால் கறக்கும் வேலையை செய்தது. மாடுகளை வளர்த்து பராமரித்தல் செய்ய நாடுமுழுவதும் இருந்து வேலையாள் வேலை செய்தனர். இதில் கணிசமாக தமிழ்நாட்டில் இருந்தும் மக்கள் வந்திருக்கிறார்கள். அவ்வாறு குடியேறிய மக்கள் ஆரே காலனியின் பால் மாடுகள் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்களில் குடியேறினார்கள். அவர்களின் தலைமுறை இன்று பரந்து விரிந்து தழைத்து வளர்ந்து நிற்கிறது.

பயணத்தின் நடுவே சாலையோரங்களில் திரைப்படங்கள், நாடகங்களுக்காக திரைப்பட குழுவினர் படம் பிடித்து கொண்டிருந்தனர்.

இதமான தென்றல் காற்று பேருந்தின் சன்னல் வழியே நம்மை உதகை மலையில் பயணம் செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

ஆரேவின் நடுவில் அமைந்திருந்த ஐந்தாம் எண் மார்கெட் பகுதியில் மக்கள் கூடும் இடமாக இருந்தது.‌ ஆரே முழுவதும் உள்ள உள்ளூர் மக்கள் மார்கெட் பகுதியில் அமைந்திருக்கும் கடைகள் தங்களின் தேவைகளை வாங்கி சென்றனர்.

நமது பேருந்து ஐந்தாம் எண் பகுதியில் இருந்து 13ஆம் புகுதியை எட்டியது.‌

“தாயே மகமாயி எங்கள் தாயே மகமாயி” பாடல் சவுண்ட் செட் போட்டு ஒலிப்பது போல் என் காதுகளில் கேட்டது.‌ உள்ளூர் தமிழ் மக்கள் மாரியம்மன் கோவில் கட்டி வழிபாடு செய்கின்றனர். கோவில் மணி ஓசே போலவே அந்த பாடல் ஒலித்தது.

ஆரே காலனியின் மக்கள் வசிப்பிடங்கள் பெரும்பகுதி காடுகள் நடுவே உள்ளதால் சிறுத்தைகள் தாக்குதல் கூட பல நேரங்களில் நடந்திருக்கிறது. சிறுத்தைகள் தாக்குதலில் மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில் நமது கடைசி நிறுத்தமான நியூசிலாந்து மாணவர் விடுதி வந்ததும் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு சாயா குடிக்க சென்றனர் பேருந்து ஊழியர்கள். நாமும் அவர்களுடன் ஒரு சாயாவை வாங்கி மெதுவாக சுவைத்தோம்‌. குளிருக்கு இதமான இதயத்துக்குள் சென்றது ஆரே காலனி சாயா.

பதினைந்து நிமிடங்கள் கழித்து பேருந்து மீண்டும் கோரோகாவ் பேருந்து நிலையம் செல்ல தொடங்கியதும் நாமும் அதில் ஏறி சோட்டா காஷ்மீர் பகுதியில் இறங்க திட்டம் செய்தேன்.

ஆரே காலனியின் சோட்டா காஷ்மீர் பூங்கா காதலர் உலா வரும் பூங்கா. சோட்டா காஷ்மீரில் இறங்கியதும் அங்கே ஒரு சிறிய ஏரி இருந்தது. அந்த சிறிய ஏரியில் சிறிய அளவிளான படகு சேவைகள் செய்கிறார்கள். படகுகள் எல்லாம் காஷ்மீர் படகுகள் போலவே வடிவமைக்ப்படிருந்தது‌. காதலர்கள் தாமே இயக்கி காதல் கொள்ளும் இடமாக திகழ்ந்தது .

கடைசியாக நமது பயணம் மிட்டி நதியின் பாதைய கண்டு தொடர வேண்டும் என்று மிட்டி நதி பிறப்பிடமாகக் கருதப்படும் ஆரே 22 ஆம் எண் பகுதிக்கு சென்றேன். சோட்டா காஷ்மீரில் இருந்து இருபது நிமிடங்கள் பயணத்தில் நதியின் தொடக்கத்தை கண்டு அடைந்தேன்.

தொலைவில் நின்று பார்த்தால் சிறிய ஓடை போடவே காட்சி அளித்தது. ஆரே காலனி காடுகளில் நதி பாயும் வரை அது நன்னீராக செல்கிறது. மிட்டி நதி அந்தேரி பகுதியில் பாயும் போது மாநகரத்தின் கழிவுநீர் அதில் கலந்து சாக்கடையாக உருமாற்றம் பெற்று பாயத் தொடங்கியது. ஆனாலும் மும்பாய் மாநகரத்தின் இயற்கை அழகியல் ஆரே மில்க் காலனியே!

– பாண்டி.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *