26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மிருத்யுஞ்ஜய ஹோமம்

சென்னை கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் மேலக்கோட்டையூரில் உள்ளது மேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். காலமறியா காலத்தே தோன்றிய இந்த ஆலயத்தில் வருணன், மேகநாதன் எனும் இந்திரஜித் ஆகியோர் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்து பலன் பெற்றார்கள் என புராணங்கள் கூறுகின்றன. மேலும் இங்கு வந்து வணங்கி வழிபட்டால் ஆயுள் கூடும் என்பதும் இன்று வரை உள்ள நம்பிக்கை. இந்த ஆலயத்தில் இறைவன் மேகநாதேஸ்வரராய் சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேகாம்பிகை நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய பலமும், ஐஸ்வரியமும் கிட்டும் என்கிறார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

ஒவ்வொருவரும் ஏன் மிருத்யுஞ்சய ஹோமம் ஏன் செய்ய வேண்டும்!

பூர்வஜன்ம வினையாலும், சகல நோய்களில் இருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெறவும் நமது வேதங்கள் அருளிய சிறந்த பரிகார வழிபாடு மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம். ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்ய வேண்டிய வழிபாடுகளில் முக்கியமானது இந்த மிருத்யுஞ்ஜய ஹோமம். இதை வீட்டில் செய்வதை விடவும் பழைமையான சிறந்த பரிகாரக் கோயில்களில் செய்வது சிறப்பானது எனலாம். திருக்கடவூர், ஸ்ரீவாஞ்சியம் போன்ற சிறப்பான ஆயுள் வழங்கும் ஆலயங்களில் செய்யலாம். அதைப்போலவே சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் செய்வது சிறப்பினும் சிறப்பானது.

அருள்மிகு மேகநாதேஸ்வரர்

மார்க்கண்டேய மகரிஷி முதன்முதலாக ஜபித்து வழங்கிய 16 மூலமந்திரங்களையும் இங்கு பலமுறை உருவேற்றி ஹோமத்தில் சமர்ப்பித்து நடத்துகிறார்கள். திருக்கடையூர் போன்ற பழைமையான ஆலயங்களில் மட்டுமே முறைப்படி நடத்தப்படும் இந்த ஹோமம் இங்கு வெகு சிரத்தையுடன் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், பூரண ஆயுளும், யம பயம் இல்லாத வாழ்வும் கிட்டும் என்கிறார்கள். மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். மரண பயத்தை ஒழிக்கும் சக்தி இந்த ஹோமத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள்.

26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

‘ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!’

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *