
சென்னை: ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.