
திருச்சி: “சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்புகளில் இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உள்ளார்கள். இதற்கு ஒப்புக் கொண்டு பெற்றோர் கையெழுத்திடாமல், அதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும்” என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை என்ற தேசியக் கல்விக் கொள்கை வரைவாக இருந்தபோதே தற்போதைய முதலமைச்சர் அதனை எதிர்த்தார். கரோனா காலத்தில் அவசர, அவசரமாக அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.