
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தனது 42-வது கிளையை தஞ்சாவூரில் ( Aswins sweets Tanjore )கோலாகலத்துடன் தொடங்கி இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் தலைவர் திரு. கே.ஆர்.வி கணேசன் மற்றும் தஞ்சாவூர் எம்.எஸ் மணியம் டிரான்ஸ்போர்ட்ஸ் குழும தலைவர் திரு.சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் இதில் எம்.எஸ் மணியம் ட்ரான்ஸ்போர்ட் குழும இயக்குனர் திருமதி சங்கவை கடையை திறந்து வைத்தார்.
முதல் விற்பனையை அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் திரு கே.ஆர்.வி கணேசன் தொடங்கி வைக்க அதை எம்.எஸ் மணியம் டிரான்ஸ்போர்ட் குடும்ப தலைவர் திரு. சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். மேலும் எம்.எஸ் மணியம் ட்ரான்ஸ்போர்ட் குழுமத்தைச் சார்ந்த திரு .சிபி திரு .சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா கால சலுகையாக வெள்ளிக்கிழமை வரை ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ காரம் இலவசம் அரை கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரம் இலவசம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மக்கள் தரும் ஆதரவை தொடர்ந்து தஞ்சை மாவட்ட மக்கள் நல்ல ஆதரவு தருமாறு நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.