
புதுடெல்லி: பிரபல பாகிஸ்தான் நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருவர் இந்த நடிகர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.