
ஆந்திராவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் லாக்கரில் வைத்து தங்கத்தை எடுத்துச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காய்கறி முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த நேரத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்து வருகிறது.
ஸ்மார்ட் போனில் இருந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தது வீட்டிலிருந்தே ஆன்லைன் டெலிவரி மூலம் அதனை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து வாடிக்கையாளர் பலரும் ஆன்லைனில் தங்க நாணயத்தை வாங்கி வருகின்றனர்.
கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் இணைந்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக கூறியது.
வாடிக்கையாளரின் தங்க ஆர்டரைத் தொடர்ந்து அதனை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி கொடுப்பதற்காக ஒரு பாதுகாவலரோடு, லாக்கரில் தங்கத்தை வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.