• May 2, 2025
  • NewsEditor
  • 0

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பிரபல சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்றதாக பரவிய வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகை அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சாலிகிராம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை அமுதா (28). இவரது கணவர் ஐடி நிறுவன ஊழியர் சக்தி பிரபு (30). இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அமுதா படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்ப இரவு நீண்ட நேரமாவது வாடிக்கையாகியுள்ளது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், சீரியல்களில் நடிப்பதை நிறுத்தும்படி கூறி வந்ததற்கு அமுதா உடன்படவில்லை என்றும் காரணங்கள் அடுக்கப்பட்டு, கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், மனைவியை பிரிந்து ஆவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சக்தி பிரபு சென்று விட்டார் என்று கூறப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *