
சென்னை: சிபிஐ, வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என துறையை வைத்து மிரட்டினாலும், கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக எம்எல்ஏ இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காவல் துறை மானிய கோரிக்கையில் நான் பதில் அளித்து பேசும்போது, தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கூறினேன். ‘‘ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம், இன்று கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது’’ என்றேன். இதில் ‘ஊர்ந்து வந்து’ என்பதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார்.