UPSC/ TNPSC குரூப் -1, 2  தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவச பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.  

அதன்படி UPSC/ TNPSC குரூப் -1, 2  தேர்வுகளில் வெல்வது எப்படி‘?’ என்ற தலைப்பில் கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மே 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் கோவை சரக டி.ஐ.ஜி மருத்துவர் சசி மோகன் ஐ.பி.எஸ் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.

போட்டித் தேர்வு வழிகாட்டுதல்

இதுகுறித்து கோவை சரக டி.ஐ.ஜி மருத்துவர் சசிமோகன் கூறுகையில், “எனக்குச் சொந்த ஊர் திருச்சி. பள்ளி படிக்கும்போதே சிவில் சர்வீஸ் என்று முடிவு செய்துவிட்டேன்.

நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு என்னுடைய பொது அறிவை மேம்படுத்துவதற்காக சென்னையில் கால்நடை மருத்துவம் படித்தேன்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.வி.ஆர்.ஐ (Indian Veterinary Research Institute) முதுகலை படித்தேன். சிவில் சர்வீஸ்க்காக என்னுடைய முதல் முயற்சியை அங்கிருந்துதான் எழுதினேன்.

முதுகலைப் படிப்பில் அதிகளவு சுமை இருந்ததால் அப்போது வெற்றி பெற முடியவில்லை. இதனிடையே ரயில்வேயில் பணி கிடைத்தது. இருப்பினும் சிவில் சர்வீஸை இலக்காக வைத்து முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

இரண்டாவது முயற்சியில் சர்வீஸ் கிடைத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சிவில் சர்வீஸ்க்கு முயற்சி செய்வோர் பயிற்சியை முடிந்தவரை விரைவாக தொடங்குவது நல்லது. இது உங்கள் ஒட்டுமொத்த அறிவை மேம்படுத்த உதவும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படிக்கிறோம் என்றில்லாமல், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரம், விளையாட்டு, அறிவியல், அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். சமூகம் பற்றிய விழிப்புணர்வும், பொது அறிவும் முக்கியமானது. வெறும் புத்தகத்தை எடுத்து படிக்கிறோம் என்பது மட்டுமே சரி வராது.

போட்டித் தேர்வு வழிகாட்டுதல்
போட்டித் தேர்வு வழிகாட்டுதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு உலக வர்த்தகத்தையே மாற்றுகிறது. இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பள்ளி, கல்லூரிகளில் செய்தித்தாள் படிக்கும் போது சினிமா மற்றும் விளையாட்டு செய்திகளைத்தான் படிப்போம். அது மட்டும் போதாது.

உலகளவு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல், முன்னேற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை டார்கெட் செய்து படிக்க வேண்டும்.

தேர்வுக்குத் தயாராக மிகவும் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்றில்லை. திட்டங்களை நோக்கி முறையாகப் பயணித்தால் போதும். அதுவே நேரம், ஒழுக்கம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துவிடும்.

தேர்வுக்குத் தயாராகும்போது பாடத்திட்டத்தைத் தெரிந்து கொண்டு, பழைய வினாத்தாள்களைப் பார்க்க வேண்டும். நமது பலம், பலவீனத்தை ஆய்வு செய்து, தேர்வுக்கு எது முக்கியமோ அதை அதிகம் படிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் என்றாலே எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மட்டும் தான் தெரியும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆகியவற்றை தவிர நிறைய மத்திய அரசுப் பணிகள், குரூப் பி என்று நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதுதான் உயர்ந்தது, அதுதான் உயர்ந்தது என்று எதுவும் கிடையாது. போட்டிகள் நிறைந்த உலகில் வரும் வாய்ப்புகள், பணியிடம், மதிப்பெண் ஆகியவற்றை பொறுத்துதான் பணி கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இது மிகப்பெரிய வாய்ப்பு. நம்மை சுற்றி நடக்கும் நிறைய விஷயங்களை, மாற்ற முயற்சி செய்வதற்கான ஒரு வாய்ப்பு தான் இந்தப் பணி.

போட்டித் தேர்வு வழிகாட்டுதல்
போட்டித் தேர்வு வழிகாட்டுதல்

எல்லா பணிகளுக்குமே ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அதன் மூலம் தங்களின் இலக்கையும் பூர்த்தி செய்து, சமுதாயத்தின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கு இது பெரிய வாய்ப்பு.

தேர்வு எழுதி உள்ளே வருவதே பெரிய சாதனைதான். இதற்கு ஸ்கூல் டாப்பராகவோ, ஐ.ஐ.டியில் படித்தவராகவோ எல்லாம் இருக்க தேவையில்லை.

இந்தத் தேர்வில் வெற்றி பெற என்ன தேவையோ அதையறிந்து பயணித்தால் போதும். முதலில் நமக்கு தகுதியைப் பரிசோதனை செய்வது நாம்தான். இதை ஒரு கோச்சிங் அகாடமி சொல்ல முடியாது. அதனால் தான் உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் பலத்தை மேலும் வலிமையாக்கி, உங்கள் பலவீனத்தைக் குறைக்க இது உதவும்.

நான் பொலிடிக்கல் சயின்ஸை ஆப்ஷனாக எடுத்தேன். இப்போதிருப்பதைப் போல அப்போது மெட்டீரியல்ஸ் கிடைக்காது.

பொலிடிக்கல் செயின்ஸ்க்கு தமிழ்நாட்டில் யாரும் கோச்சிங்கே எடுக்க மாட்டார்கள். இன்றைக்கு அந்த நிலை எல்லாம் மாறிவிட்டது.

நமக்கு நிறைய பயிற்சி மையங்கள், மெட்டீரியல்ஸ் கிடைக்கின்றன. இருப்பினும் அவர்கள் வழி மட்டும் தான் காட்டுவார்கள். நீங்கள் தான் உங்களுக்கான நீதிபதி. உங்களின் திறமைக்கும், ஆற்றலுக்கும் எவ்வளவு உழைப்பை செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்.” என்றார்.

இந்த லிங்கில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்!

Loading…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *